திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 951 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி (02.01.2024) இரண்டாம் தேதி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு இன்று திருச்சிராப்பள்ளி விமான நிலைய புதிய 2வது முனைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்… தமிழ்நாடு முதல்வர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பு என நாங்கள் நம்புகிறோம். அவரை வரவேற்று அழைத்து செல்வதற்கான வழிகளை ஆய்வு செய்தேன். திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு இன்னும் 70 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டியுள்ளது.

அடுத்த மாதம் அப்பணிகள் முடிவுறும் என தெரிவித்தார். மேலும் இந்த இரண்டாவது முனைய பணிகள் இன்னும் முடிய வேண்டி உள்ளது. திறப்பு விழா முடிந்தவுடன் அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments