திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கீழே காவல் நிலையத்துக்கு மிக அருகில் கதிர்வேல் பீடா ஸ்டால் என்ற கடையில் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 18 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த கடையின் உரிமையாளர் கணேசன் வடக்கு வாசல் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர். கடைக்கு சீல் வைத்து அவரை பிடித்து காவல்துறையிடம் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் உணவு மருந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பிடித்துக் கொடுத்த கணேசன் குடும்பத்தினருடன் தலைமறைவாகியுள்ளார். உணவு மருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் போலீசாரிடம் கேட்ட பொழுது அவரை மீண்டும் பிடித்து விடுவோம் என பதில் வந்துள்ளது.

காவல் நிலையத்திற்கு மிக அருகாமையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை பிடித்து கொடுத்து அவர் தற்பொழுது தலைமறைவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments