திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அப்பாத்துரை ஊராட்சியில் உள்ள மேலவாளாடி கிராமத்தில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா பிள்ளையார் கோயில் மற்றும் முஸ்லிம் மசூதி அருகே உள்ள இடத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவினை திருச்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் தலைவர் விக்னேஷ் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பாரதி, மாவட்ட துணைத் தலைவர் ஹரிஷ், மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகர் விஜய் உத்தரவின்படி,


மாநில பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் ஆலோசனையின் படி நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில் முஸ்லிம், கிறிஸ்தவர், இந்து ஆகிய மூன்று மதத்தினரும் ஒன்று சேர்ந்து விறகு அடுப்பு வைத்து மண்பானையில் பொங்கல் சமைத்து மஞ்சள், கரும்பு ஆகியவற்றை வைத்து பூஜை செய்தனர்.

இந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட நிர்வாகிகள் நிஷாந்த், ஜே .பி .ஆர் கோபி, பாஸ், பவின் விஜயகுமார், சரண்ராஜ், தினேஷ், இளவரசன், அருண், இளங்கோவன், புள்ளம்பாடி ஒன்றிய பொருளாளர் வசந்த், ஒன்றிய தலைவர் சுதன் உள்ளிட்ட நடிகர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments