Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை இடம் மாற்றம் -ஆட்சியர் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளில் 22 லட்சத்து 91 ஆயிரத்து 890 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.ஆண் வாக்காளர்கள் 11,11573,பெண் வாக்காளர்கள் 11,79,985, பிற – 332 பேர்கள் இறுதி வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டார்.

 சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் .

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2024 – ஐ ககுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இச்சுருக்க முறை திருத்தம் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2024 இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னலையில் வெளியிடப்பட்டது. அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். இன்று (22.01.2024) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட விபரம் பின்வருமாறு:

அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி -139, ஸ்ரீரங்கம், குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி 143, இலால்குடி ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் பாலின விகிதம் 1062/1000 (பெண்கள்/ஆண்கள்). திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 27.10.2023 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2547 ஆகும். மேற்படி பட்டியலின்படி, சுருக்கமுறை திருத்தங்களின் போது வாக்காளர் பட்டியலில் புதிதாக 50749 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மேற்படி பட்டியலின்படி, சுருக்கமுறை திருத்தங்களின் போது வாக்காளர் பட்டியலில் இறந்த மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்துள்ள நபர்களுடைய பெயர்கள் படிவம்-7 பெற்ற பின்னர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தூய்மையாக்கல் பணியின்போது சுருக்கமுறை திருத்தங்கள் பணி மேற்கொண்டு மொத்தம் 22028 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 05.01.2023 முதல் நாளது தேதிவரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 49761 புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைஅச்சிட்டு வரப்பெற்று கணினியில் விபரங்களை பதிவேற்றம் செய்து அஞ்சல்துறை மூலமாக சம்மந்தப்பட்ட வாக்காளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்குமுன்பாக வரப்பெறும் விண்ணப்பங்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அஞ்சல் துறை மூலமாக வாக்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் பத்து தினங்களுக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர்நீக்கம் செய்திட விண்ணப்பம் செய்யலாம். மேலும் பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் கடைசி நாளிலிருந்து பத்து நாளுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை வாக்காளர்கள் அளிக்கலாம். எனவே வாக்காளர் பட்டியலில் விடுபட்ட இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பங்களை அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம்/இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகள் ஏதுமிருப்பின் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்/ வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரிடம் எதிர்வரும் 31.01.2024 க்குள் விண்ணப்பம் அளித்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *