திருச்சி தெற்கு மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் !கழக முதன்மை செயலாளர்- அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு !
மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ..

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நினைவு ஊர்வலம் நாளை 25.01.2024 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் கோஹினூர் திரையரங்கம் அருகில் இருந்து மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் கழக முதன்மை செயலாளருமான கே.என். நேரு தலைமையில் புறப்பப்பட்டு தென்னுர் உழவர் சந்தை அருகில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் சென்றடைந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படும் . அதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு மாநகரம் கலைஞர் நகர் பகுதி கழகத்தின் சார்பில் கல்லுக்குழி பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் சாலையில் மாலை 6:00 மணிக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட ,வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://www.threads.net/@trichy_vision






Comments