திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா பா ஜ க திருச்சி மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் புரட்சிக்கவிதாசன்,

இணை அமைப்பாளர்கள் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் மற்றும் ஒண்டிமுத்து ஆகியோர் முன்னிலையில் அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் லீமா சிவகுமார், இணை அமைப்பாளர் சந்துரு, மேற்கு தொகுதி பொறுப்பாளர் புவனேஸ்வரி, அமைப்பாளர் கௌதம் நாகராஜ், இணை அமைப்பாளர் காளீஸ்வரன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற பொறுப்பாளர் ஜெயகருணா, அமைப்பாளர் ராஜேஷ் குமார், இணை அமைப்பாளர் சர்வேஸ்வரன்,

திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற பொறுப்பாளர் செல்வதுரை, அமைப்பாளர் எஸ் பி சரவணன், இணை அமைப்பாளர் சிட்டிபாபு, மாவட்ட பொதுச் செயலாளர் பொன் தண்டபாணி மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments