திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் சேசு மகன் இருதயராஜ் (43). விவசாயி. இவர், மலையடிப்பட்டி கிராமத்தில் தனது தந்தை பெயரில் உள்ள நிலம் தொடர்பாக மணப்பாறை வட்டாட்சியர் மற்றும் மலையடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் (45) ஆகியோரிடம் மனு கொடுத்திருந்தார்.

இதுதொடர்பாக (26.06.2023)-ம் தேதி மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த விஏஓ ரவீந்திரனை நேரில் சந்திக்க சென்றார். அப்போது, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஏஓ இருதயராஜ், அங்கு நின்று கொண்டிருந்த இருதயராஜூவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருதயராஜ், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில தினங்களில் வீடு திரும்பினார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆகியோரிடம் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி இருதயராஜ் மனு அளித்திருந்தார். பின்னர் இருதயராஜ் மணப்பாறை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில், விஏஓ ரவீந்திரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் மணப்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.




            
            
            
            
            
            
            
            
            
            


Comments