திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் பகுதியில் சட்ட விரோதமாக மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடந்த பொழுது அதனை பிடிப்பதற்கு திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த மாட்டு வண்டிகளை பிடிப்பதற்காக திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் பிரியா, காவலர்களை சம்பவ இடத்திற்கு அனுப்புவதற்கு காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் தப்பி சென்றுவிட்டனர்.

இதைப்பற்றி தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், திருவெறும்பூர் பிரியாவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதனால் காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments