திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர், அனைக்கரை ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது…. எங்கள் பகுதியில் நாங்கள் வீட்டு மனை நிலம் பட்டா, சிட்டா, அடங்கல் வரைப்படத்தில் பெயர் சேர்த்தல், சரியான அளவிடல், சரியான சர்வே எண் உள்ளிட்ட ஆவணங்கள் மூலமாக 150 வருடத்திற்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம்.

இங்கு 1000 வீடுகள், 1008 குடும்ப அட்டைகள் மற்றும் 2500 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் வீட்டு வரி மற்றும் மின்சார வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி, போன்ற அனைத்து வரியும் கட்டி வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் நிலம், வீடு, வீட்டின் பின்புறம், காலிமனை அதன் குறித்து பட்டா (பிரைவேட் தோப்பு – சர்க்கார் மனை) என்று இருப்பதை மாற்றி நகர நத்தம் நிலவரித் திட்டம் மற்றும் இரயத்துவாரியாக மாற்றி பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision







Comments