Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அம்மா அமமுக – மகள் பாஜக

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முக்கிய நிர்வாகியுமான சாருபாலா தொண்டைமானின் மகள் ராதா ரஞ்சினி தொண்டைமான், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையான இவர், இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலை பாஜகவில் இணைந்துள்ளார். சாருபாலா தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தான குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த 2001 முதல் 2009 வரை திருச்சி மாநகராட்சி மேயராக இருந்தவர்.

மேலும் இதுகுறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தனது சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்…..புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையும், சிறந்த சமூக சேவகியுமான, சகோதரி, ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி அவர்கள், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.narendramodi அவர்கள் நல்லாட்சியாலும், ஆளுமைத் திறனாலும் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, நேற்றைய தினம் @BJP4Tamilnadu மூத்த தலைவர்கள் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்கள். அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

புதுக்கோட்டை சமஸ்தான மகாராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள், 1948 ஆம் ஆண்டு, சுதந்திர இந்தியாவுடன், புதுக்கோட்டை சமஸ்தானத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் இணைத்து, சமஸ்தானத்திற்குச் சொந்தமான 48 லட்சம் ரூபாய் நிதியையும், மொத்த சொத்துக்களையும், நமது நாட்டிற்கே வழங்கியவர். புதுக்கோட்டை, தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டபோது, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க வழங்கியவர்.

நாட்டுக்காக, மக்கள் நலனுக்காகவே வாழ்ந்த பெரும் பாரம்பரியம் மிக்க ராஜகுடும்பத்தில் இருந்து, சமூகத்திற்காகவும், பொதுமக்களுக்காகவும் உழைப்பதற்கு முன்வந்திருக்கும் சகோதரி ராதா நிரஞ்சனி தொண்டைமான் அவர்களின் வருகை, பாஜகவுக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பது உறுதி.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *