நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் இன்று (24.03.2024) நடைபெற உள்ளது.

அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோயில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 01:30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதியம் 03:30 மணியளவில் திருச்சி வந்தடைகிறார்.

திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை 04:40 மணியளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகை தருகிறார். கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு 08:00 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டுகிறார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments