இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மதிமுக துணை பொது செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் மாநாடு துரை வைகோ பேசுகையில்…. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாத போது தான் நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். கட்சிக்காரர்கள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விட்டார்கள். இப்பொழுதும் நான் பெரிய வேட்கையோடு, ஆசையோடு அரசியலில் இருக்கிறேன் என்றால் கிடையவே கிடையாது.

உண்மையாகவே சொல்கிறேன். மனசை தொட்டு சொல்கிறேன். இப்பொழுதும் தேர்தலில் நிற்கிறேன் என்று நான் சொல்லவில்லை. வேறு யாரேனும் நிறுத்துங்கள், நான் பணியாற்றுகிறேன் என கூறினேன். ஏனென்றால் என் கட்சிக்காகவும், என் அப்பாவுக்காகவும் உழைத்து உழைத்து தேய்ந்தவர்கள் இங்கு நிற்கிறார்கள் என அழுதபடி பேசிய துரை.வைகோவால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

செத்தாலும் எங்கள் சின்னம் தான். நான் சுயமரியாதைக்காரன்! நாங்கள் உதயசூரியன் சின்னத்தை மதிக்கிறோம். ஆனால் மதிமுகவில் உள்ள பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்க முடியாது. நீங்கள் வேறு வேட்பாளர் நிறுத்துங்கள், நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம், ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது. நாங்கள் சின்ன கட்சி தான், பெரிய சக்தி கிடையாது. நீங்கள் சீட்டே கொடுக்கவில்லை என்றாலும், 40 தொகுதிகளிலும் உங்களுக்கு உறுதுணையாக பணியாற்ற தயாராக இருக்கிறோம். எங்களை புண்படுத்தாதீர்கள் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments