இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பாராளுமன்ற தேர்தல், 2024 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்வு குலுக்கள் முறையில் (Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதிப் குமார் முன்னிலையில் 21.03.2024 அன்று தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கீழ்கண்டுள்ள விபரப்படி சட்டமன்ற தொகுதிவாரியாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, 24.03.2024 இன்று அனைந்து சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

அதனடிப்படையில் திருச்சிராப்பள்ளி ஹோலிகிராஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருவெறும்பூர் மான்போர்ட் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (24.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண் அலுவார்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேற்கண்டுள்ள பட்டியலில் கண்டுள்ள பயிற்சி வகுப்பின் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டன.


மேற்கண்டுள்ள பயிற்சியின் போது வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னர், வாக்குப்பதிவு நாளன்று மற்றும் வாக்குப்பதிவு முடிவுற்ற பின்னர் பல கட்டங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஆற்ற வேண்டிய பணிகள குறித்தான பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு அலுவலர் நிலை வாக்குப்பதிவு அலுவலர்நிலை 1 மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் நிலை II ,3ஆகியோர் வாக்குப்பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தான பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் மேற்கண்டுள்ள பயிற்சியின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை தொடர்பான செயல்முறை விளக்கம், பராளுமன்ற தேர்தல் 2024 இல் பயன்படுத்தப்படும் படிவங்களை கையாலும் முறைகள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் நேரடியாக ஒப்படைக்கவேண்டிய

முக்கிய உறைகள் தொடயான விளக்கம் மற்றும் தேர்தல் சமயத்தில் வாக்குச்சாவடி மையத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேற்கண்டுள்ள பயிற்சிக்கு தேவையான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துக்குழு மற்றும் ஆம்புலன்ஸ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பயிற்சி மையங்களிலும் பயிற்சிகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision





            
            
            
            
            
            
            
            
            
            


Comments