காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் திருச்சி ரயில்வே எஸ்ஐ சுரேஷ் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாலிபரின் பையை சோதனை செய்ததில் அவர் பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரனையில் மதுரை மாவட்டம் அவணியாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகவேலல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், திருவாரூருக்கு மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வைத்திருந்த 1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரூபாய் ரொக்கத்தை கொண்டு வந்தார்.

மேலும் பணத்திற்க உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருச்சி மேற்கு பறக்கும்படை அதிகாரி வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைத்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments