திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிமனை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனை திமுக முதன்மைச் செயலாளர் – தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தோழமை கட்சியின் நிர்வாகிகள், ஆதரவு அமைப்பு நிர்வாகிகள், மறுமலர்ச்சி திமுக தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments