பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (31.03.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் உறுதிமொழியை வாசித்து பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி மற்றும் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்கள்.

இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் வாக்காளர்கள் பணம் வாங்க மாட்டோம். பணம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். வாக்களிப்பது ஜனநாயக கடமை குறித்த பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments