திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கருப்பையா தொடர்ந்து தான் போட்டியிடும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கருப்பையாவுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்று காலை முதல் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல்வேறு வகையில் வரவேற்பு அளித்த வருகின்றனர்.

அந்த வகையில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்கணூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் கருப்பையாவிற்கு அங்குள்ள பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்ப்படித்தனர். கோலாட்டம் ஆடிய பெண்களுடன் வேட்பாளர் கருப்பையா சுற்றி சுழன்று கோலாட்டம் ஆடியது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments