கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மலேசியா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி போன்ற நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement
இதனால் திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் அதிகளவு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளை வழியனுப்புவோம், விமானத்தில் வரும் பயணிகளை அழைத்துச் செல்வதற்கும் உறவினர்கள் ஏராளமானோர் விமானநிலையத்திற்கு வந்து செல்கின்றனர். தற்பொழுது கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்துள்ளதால், விமான நிலைய பணியாளர்களுக்கு, பயணிகளுக்கும் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement
மேலும் தடுப்பு கம்பிகள், பின்னால் பயணிகளை அழைத்து வருபவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் தரைப்பகுதியில் கிருமிநாசினி கொண்டு சுகாதார துறையினர் சுத்தம் செய்து வருகின்றனர். மேலும், விமானத்தில் பயணித்த பயணிகளை உடல் வெப்பம் மற்றும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 



 
             
             
             
             
             
             
             
             
             
            


Comments