திருச்சி மாவட்டம் வாளசிராமணி பகுதியில் பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், தான் செய்த பணிகள் குறித்து Progress Report போல தொகுதி மக்களுக்கு புத்தகமாக வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார். இந்த புத்தகத்தை நீங்கள் படித்தீர்களானால் தனக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் போடுவீர்கள் என கூறினார். எம்.பி தொகுதி நிதியான 17 கோடி ரூபாயில் 42 வகுப்பறைகள், சமூக கூடங்கள், ரேசன் கடை, உள்ளிட்டவை கட்டி கொடுத்து உள்ளதாக கூறினார். தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என குற்றஞ்சாட்டினார். மோடி ஒரு யோகி என்றும் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென அவர் உழைத்து கொண்டிருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து வேலம்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தருக்கு, கிராம மக்கள் திரளாகக்கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். தான் எம்.பி ஆனால் ஆயிரத்து 500 ஏழைக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். மோடி, நாட்டு மக்கள் வறுமையில் இருக்க கூடாது என்பதற்காக உழைத்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். தான் வெற்றி பெற்று வரும்போது நிச்சயமாக உங்கள் ஊர் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.

தொடர்ந்து ஊரக்கரை பகுதியில் ஆதரவு திரட்டிய டாக்டர் பாரிவேந்தருக்கு, அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வாக்குறுதிகளைத் தெரிவித்து அவர் வாக்கு சேகரித்தார். தா.பேட்டை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அரியலூர் வழியாக நாமக்கல்லுக்கு நிச்சயமாக ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இத்திட்டம் நிறைவேறினால் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும், இத்திட்டம் வந்தால், 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறும் எனவும் குறிப்பிட்டார். தேர்தலில் ஊழல் செய்யாதவர்களாக, லஞ்சம் வாங்காத நல்லவர்களை, தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். திமுகவினர் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி மக்களை ஏமாற்றி, குழப்பி விடுவதாக குற்றஞ்சாட்டினார். விவேகானந்தர் போன்றவர் மோடி எனவும், நாட்டு மக்கள் கஷ்டப்படகூடாது என இரவு பகலாக உழைத்து கொண்டு இருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

தொடர்ந்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் பிரசாரம் செய்த டாக்டர் பாரிவேந்தருக்கு வானவேடிக்கை முழங்க தேசிய ஜனநாயக கூட்டணியினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அப்போது பேசிய அவர், 2019 வாக்குறுதியின்படி 118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாகக் குறிப்பிட்டார். தான் மீண்டும் எம்பி ஆனால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். தமிழகத்தில் ஊழல் தலை விரித்தாடுவதாகவும், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பி, மோடியின் கரத்தை வலுப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments