திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் திருச்சி செம்பட்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்கு பதிவு செய்ய வந்தார்.
வரிசையில் நின்று வாக்களிக்க உள்ளே சென்றபோது தேர்தல் அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களுக்கு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறியதை தொடர்ந்து, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விஐபி என்ற முறையில் வாக்குப்பதிவு செய்வதை புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் ப.குமார் தெரிவித்தார். அதற்கு அதிகாரிகள் மறுத்ததை தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் முன்னாள் எம்.பி ஐ சமரசம் செய்தனர். அதற்கு அவர் உங்கள் மேல் அதிகாரியை பேச சொல்லுங்கள், முதலில் மறுத்துவிட்டு பின்பு சமரசம் செய்வது எந்த விதத்தில் நியாயமான கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பூத் ஸ்லீப்பை திரும்ப பெற்றுவிட்டு வாக்கு பதிவு செய்ய மறுத்து அங்கிருந்து வெளிநடப்பு செய்தார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments