தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் மாநில சமேளனம் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் மற்றும் அரிசி வணிகர்கள் இதில் கலந்துகொண்டு நெல் மற்றும் அரிசி ஆலைகள், அரிசி விற்பனை தொடர்பான தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில செயலாளர் மோகன் கூறுகையில்… 5 சதவீத ஜிஎஸ்டி வருவியால் அரிசி விலை உயர்ந்து காணப்படுகிறது. நான்கு மாநிலங்களில் உள்ள இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் அரிசிக்கு விதித்துள்ள ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியை முழுமையாக விலக்கு அளிக்கவேண்டும், மேலும் ஒரு கிலோ வாட்டுக்கு 35 ரூபாயாக இருந்த மின்கட்டணம் 150 ரூபாயாக உயர்த்தி இருப்பது என்பது அரசு விலை உயர்வுக்கு மற்றொரு முக்கிய காரணம்.


அரிசி ஆலைக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு பெற்றிருந்தாலும், பிக் ஹவர்ஸ் நேரங்களில் அதிக மின் கட்டணம் வசூலிப்பதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மார்க்கெட்டிங் கமிட்டி இடங்களில் விவசாயிகளிடம் மற்றும் பிற மாநிலத்தில் இருந்து வரும் அரிசிக்கு நேரடியாக பெறும்போது செஸ் வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசால் வழங்கப்படும் பாரத் அரிசி 5, 10 கிலோ வழங்குவது ஏற்புடையதாக இல்லை, 26 கிலோவாக வழங்கிட வேண்டும். விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் மற்ற பொருட்களை போன்று அரிசிக்கு விதிக்கப்பட்ட எம்எஸ்பி அதிகரித்ததால், அரிசி விலை உயர்ந்து இருந்தாலும் குறைக்க தேவையில்லை, அரிசியும் சீரான விலையில் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என உறுதிப்பட தெரிவித்தனர்.

வறட்சி, வெள்ளம் தமிழகத்தில் இருந்தாலும் அரிசி தட்டுப்பாடு இல்லை, அண்டை மாநிலங்களில் இருந்து அரிசி தட்டுப்பாடு இல்லாமல் வியாபாரிகளால் கொண்டுவரப்பட்டு வருகிறது. மேலும் அரசால் இலவச அரிசியும், பாரத் அரிசியும் தடையின்றி கிடைக்கிறது என்றும் தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           49
49                           
 
 
 
 
 
 
 
 

 29 April, 2024
 29 April, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments