Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

கேக் தயாரிப்பில் அசத்தும் திருச்சி இளைஞர்கள்!

பிறந்தநாள், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற நாள்களில் மட்டும் கேக் வெட்டிக் கொண்டாடிய காலமெல்லாம் போயாச்சு. நினைத்தால் கேக் என்கிற நிலையில் வீட்டி லேயே கேக் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கி இன்று திருச்சி தஞ்சை காரைக்கால் என கிளைகளை தொடங்கி அசத்தி வருகின்றனர்.

திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் லாலிப்பாப் கேக் ஷாப் நிறுவனத்தின் பங்குதாரர்கள் – இன்பா, சக்திவேல், குருமூர்த்திஆகியோர்… திருச்சியில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் லாலிபாப் கேக் ஷாப் நிறுவனர் இன்பா தங்களுடைய வெற்றி பயணத்தை பற்றி பகிர்ந்து கொள்கையில்,

பொழுதுபோக்காக கடந்த 2019-ல் கேக் தயாரிக்கும் முயற்சி தொடங்கி அதுவே எங்களுக்கான அடையாளமாக மாறி இன்று தனி ஒரு அங்கீகாரத்தையும் பெற்று தந்திருக்கிறது Lollipop the cake shop பிறந்தநாள், பண்டிகை நாட்கள் தொடங்கி இன்று எல்லா விதமான நிகழ்ச்சிகளிலும் கேக்கை விரும்புகின்றனர்.

அதே சமயம் எல்லா கேக்குகளும் ஒரே மாதிரியாக இல்லாமல் புதுமையாக தங்களுக்கு பிடித்தவாறு செய்து தர வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். அவர்களின் திருப்தியே எங்களுடைய வெற்றி அதற்காக அதிகமாக உழைத்து புதுமையாக ஒவ்வொன்றையும் செய்ய முயற்சித்தோம். இன்றைக்கு திருச்சி, தஞ்சை, காரைக்கால் என்று பல கிளைகளை தொடங்குவதற்கு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் எங்கள் விடா முயற்சியும் கடின உழைப்பும் காரணம். https://www.instagram.com/lollipopthecakeshop?igsh=MXY0YzB5dTFzZWoyNQ  தன்னம்பிக்கையோடு செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றி தான் ஹோம் பேக்கர்களாக தொடங்கிய எங்கள் பயணம் இன்று பல கிளைகளை தொடங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. செப் சக்தி, குருமூர்த்தி இவர்கள் இருவரும் நிறுவனத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமானவர்கள்.

எல்லா தொழிலும் போட்டி இருக்கத்தான் செய்கிறது. நம்மளுடைய தனித்துவத்தை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைத்துவிட்டாலே நம் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கும் இதுவரை நிறுவனத்தின் முதல் நாள் செய்த எந்த பொருட்களையும் மறுநாள் வரைக்கும் வைத்துக் கொள்வதில்லை அன்றைய  தயாரிப்பு அன்றைக்கே விற்பன என்பது எங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருந்து வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *