திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மு.திருவேங்கடம்யாதவ். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஆன்மீகம் மற்றும் திருக்கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், திருச்சி வடக்கு, மாநகர காவல் துணை ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில் ஸ்ரீரங்கத்தில் சகலவிதமான சட்டவிரோத காரியங்களும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. எனவே, ஸ்ரீரங்கம் நகர காவல்துறையில் குற்றப்பிரிவில் போதுமான அளவிற்கு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வலுப்படுத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்ரீரங்கத்தில் அதிகரித்துள்ள வழிப்பறி, பூட்டை உடைத்து திருடுதல், ஏ.சி மிஷின்களை உடைத்து செப்புக் குழாய் திருடுதல் போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஆவன செய்யவும் என தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments