வெயில் காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறையும். நுங்கை உடலில் தடவினால் சரும நோய் மற்றும் வியர்க்கூரு மறைந்துவிடும். பனை மரத்தில் இருந்து வரும் பதநீர் அருந்தினால் வயிற்று புண் குணமாகும். பனங்கற்கண்டு இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது. திருச்சியில் 105 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலை குளித்துவிட்டு அதற்கு மோர் இளநீர் உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர் மேலும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய தர்பூசணி வெள்ளரிக்காய் நுங்கு தற்போது அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நுங்கு விற்பனை திருச்சியில் சூடு பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் தண்ணீர் வரத்து குறைந்ததால் தற்போது பனைமரத்தில் காய்ப்பு குறைந்துள்ளது. இதனால் நுங்கு விலை உயர்ந்துள்ளது .

இந்த விலை உயர்வு குறித்து நுங்கு வியாபாரிகள் கூறுகையில்…. பனைமரம் அதிகளவு வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதால் தற்போது நுங்கு கிடைப்பது சிரமமாக உள்ளது. மேலும் ஏரி குளங்கள் அருகே அதிக அளவு பனை மரங்கள் நட வேண்டும் . கடந்த ஆண்டு கோடை காலத்தில் மூன்று சுளை நுங்குகள் பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு இரண்டு சுளை நுங்குகள் பத்து ரூபாய்க்கு தரவேண்டிய உள்ளது. மரம் ஏறுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் விலை உயர்ந்துள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           70
70                           
 
 
 
 
 
 
 
 

 02 May, 2024
 02 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments