108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன்திருநாள் எனப்படும் சித்திரைதேர் உற்சவம் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினசரி பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதிஉலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இவ்விழாவின் 4ஆம் நாளான இன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் நான்கு சித்திரை வீதி வழியாக திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாள் தங்க கருட சேவை தரிசனத்தை கண்டறிந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 6ம் தேதி நடைபெற உள்ளது. அன்றையதினம் நம்பெருமாள் உபயநாச்சியர்களுடன் எழுந்தருள திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெறும். தை மற்றும் பங்குனி ஆகிய இருதேரோட்டங்களில் நம்பெருமாள் மட்டுமே எழுந்தருள்வார், ஆனால் சித்திரைதேரோட்டத்தில் மட்டுமே உபயநாச்சியர்களுடன் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 02 May, 2024
 02 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments