நேற்று (03.05.2024) S.வருண்குமார் வழிகாட்டுதலின் பேரில் திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R. ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு மண்ணச்சநல்லூர் பகுதியில் ஆய்வு செய்தனர்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்த ஆனந்தபிரகாஷ் என்பவரின் இரு சக்கர வாகனம் மற்றும் வீடுகளில் சுமார் 40 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளது.

மேலும், அவரிடம் இருந்து மாந்துரை பகுதியை சார்ந்த குரலரசன் என்ற நபர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி செல்ல முற்பட்டபோது அவரிடம் இருந்த பொருட்களும் மற்றும் அவரின் வாகனமும் கைப்பற்றபட்டு மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் காவல் நிலையத்தில் இரண்டு நபரையும் அவர்களது வாகனமும் மேல்நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்புச்செல்வன், செல்வராஜ், இப்ராஹிம், கந்தவேல் ஆகியோர் உடனிருந்தனார்.

மேலும் கல்லக்குடியில் (03.05.2024) அன்று அக்பர் அலி என்பவரிடமிருந்து 14 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு மேல் நடவடிக்கைக்காக அவரை கள்ளக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பொதுமக்களும் இது போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கீழே உள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் R ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
தொலைபேசி எண் : 99 44 95 95 95. மாநில புகார் எண் : 94 44 04 23 22

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           44
44                           
 
 
 
 
 
 
 
 

 04 May, 2024
 04 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments