இன்றைய அவசர உலகில் யாரும் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இழுத்து போட்டு செய்ய தயராக இல்லை. இதற்கு அவரவர் சார்ந்த பணியும் ஒரு காரணமாக கூறலாம். முன்போல கூட்டுக்குடும்பங்கள் குறைவே இதற்கான முழு முதற்காரணமாக அறியப்படுகிறது.அடடே இந்த வேலையை மறந்துட்டமே, அந்த வேலையை மறந்துட்டமே என்ற பதட்டத்தையெல்லாம் ஓரம் கட்ட உருவெடுத்துள்ள துறை தான் ஈவன்ட் மேனேஜ்மென்ட்!
கல்யாணம் துவங்கி, கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் வரை ‘ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ பொறுப்பில்தான் இன்று ஒப்படைக்கப்படுகிறது. இத்துறை அவ்வளவாக அறிமுகமாகாத 13 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலேயே இதில் கால்பதித்து, சவாலான இத்துறையில் வெற்றியைக் கைப்பற்றி, தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் ‘JAS ஈவென்ட்ஸ்’ உரிமையாளர்கள் A.வில்ஸ்டன் ஜேம்ஸ் J.ஜெஸ்டீன் ஜெகோஸ்!..

தங்களது வெற்றி பயணம் குறித்து A.வில்ஸ்டன் ஜேம்ஸ் ,J.ஜெஸ்டீன் ஜெகோஸ் கூறுகையில்,
முதலில் கேட்டரிங் மட்டுமே தேர்வு செய்து தொடங்கினோம் நாளடைவில் கிடைத்த அனுபவம் மூலம் ஒரு முழு ஈவன்டையும் நாமே எடுத்து செய்தால் என்ன என்ற ஆர்வம் ஏற்பட்டது.அப்படி உருவாகியதுதான் JAS ஈவென்ட்!
திருமண தேதி முடிவு செய்த நாளிலிருந்து திருமணம் முடிந்து ஹனிமூன் செல்லும் நாள் வரை அனைத்து தேவைகளையும் செய்து தருகிறோம்.
அரங்கம் டெக்கரேஷன் வீடியோ போட்டோ பேக் ட்ராப் ஆடை அலங்காரம் மணமகன் மணமகன் மேக்கப் வாகன வசதி தங்கும் அறைகள் ரிட்டன் கிப்ட் இப்படி எல்லாவற்றையும் முழுமையாக செய்து தருகிறோம்.
விழாக்கள் என்றாலே விருந்தோம்பல் தான்கேட்டரிங் துறையில் நல்ல அனுபவம் இருப்பதால் விருந்தோம்பலை சிறப்பாக செய்ய வேண்டுமென்று நாங்களே உணவு தயார் செய்கிறோம்.
Https://www.instagram.com/jas_wedding_planner_?igsh=ZGR0YXZmdzh1a251
மூன்று லட்சத்தில் தொடங்கி 33லட்சம் வரை எங்களுடைய பட்ஜெட் இருக்கும்.இன்றைக்கு தங்களின் திருமணம் அல்லது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியுமே தனித்துவமாக தெரிய வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் செய்து கொடுப்பதே எங்களின் வெற்றிக்கான காரணம் என்றும் கூறலாம்.
எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஆர்வம் உள்ளவர்கள் வெற்றி பெறலாம் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்றால் அத்துறையில் உள்ள சாதக பாதகம் அனைத்தும் அறிந்து ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் புதிது புதிதாக ஒன்று கற்றுக் கொண்டு நம்மை நாமே மேம்படுத்திக் கொண்டே இருந்தால் நமக்கான அடையாளத்தை இந்த உலகம் பெற்று தரும்.திருச்சி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நாங்கள் ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்து வருகிறோம்.
13 ஆண்டுகளாக இந்த துறையில் வெற்றி பெற்றதற்கு சான்றாக பல விருதுகளும் பல அங்கீகாரங்களும் கிடைத்திருப்பது இந்த துறையில் இன்னும் கூடுதலாக பலவற்றை சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது !!
விழாக்கள் முடிவில் கிடைக்கும் வாடிக்கையாளர்களின் மனநிறைவு எங்களின் அங்கீகாரம் என்போம் ..

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           44
44                           
 
 
 
 
 
 
 
 

 06 May, 2024
 06 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments