தனக்கென ஒரு பிசினஸ் ரூட்டைப் பிடித்து அதில் ஸ்மார்ட்டான பிசினஸ் உத்திகளைப் புகுத்தி அசத்திய வருகிறார் திருச்சியை சேர்ந்த ரஞ்சிதா, புடவை ப்ரீ ப்ளீட்டிங் (Pre-pleating), மேக்கப் அகாடமி பிசினஸை வெற்றிகரமாகக் கொண்டு செல்லும் இவர், பிரைடல் மேக்கப், ஹேர் டிரெஸ்ஸிங் l ஆகிய மல்ட்டி டாஸ்கிங் வேலைகளையும் சிறப்பாகச் செய்து அசத்தி வருகிறார் திருச்சியை சேர்ந்த ரஞ்சிதா விக்னேஸ்வரன்.
ஆட்டோமொபைல் துறையில் பணிபுரிந்து வந்தேன். அப்போது தனியாக ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்கனவே எனக்கு மேக்கப் துறையில் மிகுந்த ஆர்வமும் இணைந்து மேக்கப் கலை குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து ஃப்ரீ லான்சராக பணியாற்றினேன். நம்முடைய தனித்துவத்தை உருவாக்கினால் நமக்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும். மேக் ஓவர் ஆர்டிஸ்ட் ஆக தொடங்கிய எனது பயணம் இப்போது அகாடமி தொடங்கி பல மாணவர்களுக்கு பிரைடல் மேக்கப் பயிற்சி அளித்து வருகிறேன்.
கடந்தாண்டு Bronze bridal studio and academy தொடங்கினேன். குறுகிய காலகட்டத்திலேயே பலரும் அறிந்து பயிற்சி பெற வருகின்றனர். https://g.co/kgs/ivNYcmZ எந்தத் துறையாக இருந்தாலும் அப்டேட்டாக இருக்கணும். இவ்வாறு நான் புதிதாக கற்றுக் கொள்ளும் விஷயங்களை பயிற்சி அளித்து வருகிறேன். மேக்கப் என்றால் முகத்தை அழகுப்படுத்துவது மட்டுமில்லை, ஒரு சேலையை எப்படி அயர்ன் செய்து பர்பெக்டாக கட்டணும் என்பதும் இந்த கலையை சார்ந்ததுதான். மேலும் ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது என்ன மாதிரி உடை அணியணும் அதற்கான அணிகலன்கள் என்ன என்பது குறித்தும் சொல்லித் தருகிறேன்.பயிற்சிக்கு பிறகு அழகு நிலையம் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுதி நேரமாகவும் இதனை செய்யலாம். மாதம் இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள் என்று செய்தால் போதும் ஈசியாக சம்பாதிக்கலாம்.
குடும்பத்தை சரியாக கவனித்துக்கொண்டு நம்முடைய தொழிலிலும் நாம் வெற்றி பெறலாம். அதற்கு நம் மீது யாரோ வைக்கும் நம்பிக்கை தாண்டி நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியமானது என்கிறார் ரஞ்சிதா
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments