தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மேற்கு மாவட்டம் 29வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் கடந்த 01ம் தேதி முதல் மாநில மகளிர் அணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர்.

பயிற்சி முகாமின் இறுதி நாளான நேற்று கடந்த 15 தினங்களாக பயிற்சியில் பங்கேற்ற 150 மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பயிற்சி நிறைவு விழா வார்டு தலைவர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, மாநில துணை செயலாளர்கள் முகமது ரபீக், நஜீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மமக பொதுசெயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது MLA, தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், IPP மண்டல செயலாளர் சேக், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன், மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் அப்துல் ரஜாக், வார்டு நிர்வாகிகள் அப்துல் நாசர், காஜா, அப்துல் காதர், ஜாக்கீர், அரிசிகடை சிராஜ், இஸ்மாயில், ஹனிபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments