திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டடாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக அவ்வபோது மழை பெய்து வரும் நிலையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியத்திற்கு பின் மேகங்கள் புடைசூழ இருண்டு காணப்பட்டதுடன் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் கனமழையாக வெளுத்து வாங்கத் தொடங்கியது. காற்றுடன் சில மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு கழிவு நீருடன் மழைநீர் குளம் போல் தேங்கி இருந்ததால் கடும் துர்நாற்றம் வீசியதுடன், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தோடு தண்ணீரை கடந்து சென்றனர்.

பயணிகள் பேருந்து நிலையத்திற்கு செல்ல தண்ணீரை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மணப்பாறை நகராட்சி நிர்வாகம் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து நிலையம் முன்பு தேங்கும் மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments