தமிழ்நாடு முழுவதும் பெற்றோர்களின் அலைபேசி எண்களை உறுதி செய்யும் பணியை ஆசிரியர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஒவ்வொரு மாணவரின் பெற்றோருக்கும் அலைபேசியில் அழைத்து ஒடிபி பெறுவது மட்டுமின்றி கோடை விடுமுறையில் மாணவர்களின் நலம் மற்றும் கல்வி குறித்து உரையாடுவது பெற்றோர்களிடம் பெரும் மகிழ்ச்சியையும் ஆசிரியர்களின் மீது மிகுந்த மரியாதையையும் ஏற்படுத்தி உள்ளது.

(21.05.2024) தேதியுடன் 72 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 6705 மாணவர்களின் பெற்றோர்களிடம் அலைபேசியில் ஆசிரியர்கள் பேசி 100% நிறைவு செய்துள்ளனர். அந்தநல்லூர் ஒன்றியஅரசுப் பள்ளி ஆசிரியர்களின் அளப்பரிய இப்பணியை பாராட்டி வண்ணத்தில் பாராட்டுச் சான்றுகள் வழங்கிட ரோட்டேரியன் கே ஸ்ரீனிவாசன் ரோட்டரி 3000த்தின் (2024- 25) ஆம் ஆண்டின் மீடியா பப்ளிசிட்டி ஆபிசர் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு 15,000 ரூபாய் மதிப்புள்ள வண்ண பிரிண்டர் வழங்கி வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

72 பள்ளிகளுக்கும் வண்ணத்தில் பாராட்டுச் சான்று வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம், ஸ்டாலின் இராஜசேகர், கல்வியாளர் சிவக்குமார், அலுவலக கண்காணிப்பாளர் நளினி, அலுவலர்கள் நாகராஜன், தேன்மொழி, பசுபதி, பாகிஷா, ஆகியோர் கலந்து கொண்டு, மேஜர் டோனர் ரோட்டேரியன் ஸ்ரீனிவாசன், அரசுப் பள்ளிகளுக்கு செய்து வரும் அளப்பரிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments