திருச்சி முக்கொம்பு மேலணைக்கு மேட்டூர் அணையிலிருந்து 2100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் கரூர், ஈரோடு சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் காவிரி கரையோரங்களில் கன மழை பெய்து வருவதால் முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து நாளை கொள்ளிடம் ஆற்றில் 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதே நேரம் காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது ஆகையால் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம், பாலங்களில் நன்று செல்ஃபி எடுக்க வேண்டாம், மேலும் சலவைத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக துணிகளை வைக்கவும் மற்றும் கரையோர வசிக்கும் மக்கள் தங்களது கால்நடைகளை ஆற்றில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் தற்பொழுது அறிவுறுத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments