கர்நாடகா மற்றும் கேரளா அரசு புதிய அணை கட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி ஆற்றில் நதிநீர் பங்கீட்டின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும், விவசாயிகளின் விலைப் பொருளுக்கு லாபகரமான விலை அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருச்சி ஓயாமாரி சூடுகாட்டில் உள்ள தகன மேடையில் விவசாயிகள் பிணம் போல படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்றும் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். நேற்று முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்றைய தினம் சுடுகாட்டில் பிணம் போல் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருச்சி மலைக்கோட்டையில் போராட்டம் நடத்திய சம்பவத்தில் திருச்சி தாயுமானவர் கோவில் செயல் அலுவலர் அனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில், அய்யாக்கண்ணு உள்ளிட்ட 8 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           9
9                           
 
 
 
 
 
 
 
 

 30 May, 2024
 30 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments