திருச்சி புத்தூர் அக்ரஹாரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பஜனை மடத்தில், ஸ்ரீரங்கம் ஸ்ரீமாந் ட்ரஸ்ட் சார்பாக 2-ம் ஆண்டு ஆன்மீீக கோடை விடுமுறை முகாமின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த முகாமினை ஸ்ரீமாந் ட்ரஸ்டின் தொண்டர்களான திருமதி பட்டு திருவேங்கடமும், திருமதி இந்திராணி ஸ்ரீனிவாசுலு தலைமையில் ஐந்து நாட்கள் நடைபெற்றது.

இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்த முகாமில் சனாதன தர்மத்தை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஈஸ்வரர், தேசிய கல்லூரியின் மூத்த உதவியாளர் பாலு என்கிற நாராயணன், ஈ.ஆர். மேல்நிலைப்பள்ளி வணிகவியல் துறை ஆசிரியர் வெங்கடேசன், ஐயங்கார் புத்தூர் மண்டல தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           127
127                           
 
 
 
 
 
 
 
 

 30 May, 2024
 30 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments