திருச்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு விழா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரத்திற்குட்பட்ட மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பாக நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த வாக்காளப் பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி அறிவிக்கும் பொதுக் கூட்டம் திருச்சி இ.பி, ரோட்டில் நடத்தினர். இக்கூட்டத்திற்கு வரவேற்புரை வட்டக் கழகச் செயலாளர்கள் மனோகரன், முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – அமைச்சர் மகேஸ், மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய மாநகர செயலாளர் மதிவாணன் தேர்தலுக்கு முன்பு அமைச்சரும் முதன்மைச் செயலாளருமான நேரு அதிக வாக்கு பெரும் மாவட்ட செயலாளர்களுக்கு கெளரவிக்கப்படும் என அறிவித்திருந்தார். திருச்சி மாவட்டத்தில் அதிக வாக்குகள் பெற்ற தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் அமைச்சர் மகேஸ் அவருடைய மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இருப்பவர் தான் மாநகர செயலாளர் மதிவாணன் மாநகராட்சி கோட்டத் தலைவரும் ஆவார். இக்கருத்தை மீண்டும் ஞாபகப்படுத்தி பேசி அமர்ந்தார்.

அடுத்ததாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் முதன்மைச் செயலாளருமான நேரு பேசிய பொழுது…. அனைத்து திமுக நிர்வாகிகளும் சிறப்பாக பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றி உள்ளீர்கள். திருச்சி மாவட்டத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிக வாக்குகள் பெரும் மாவட்ட செயலாளரை கெளரவிப்பேன் என நான் அறிவித்திருந்தேன். மதிவாணன் அதை நாசுக்காக பேசியதையடுத்து அதிக வாக்குகள் பெற்ற தெற்கு மாவட்ட செயலாளாருக்கு பத்து பவுன் தங்கச் செயினை அணிவிப்பேன் என மேடையில் பேசிய பொழுது அமைச்சர் மகேஸ் எழுந்து நின்று கைகூப்பி நன்றி தெரிவித்தார். அவர் மைனர் ஆக இருப்பதால் அவருக்கு மைனர் செயின் போடப்படும் என அமைச்சர் நேரு பேசிய பொழுது அமைச்சர் இருவரும் மேடையில் உள்ளவர்களும் வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தனர்.

இதனை கேட்ட திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தனர். கூட்டத்திற்கு வரவேற்புரை வட்டக் கழகச் செயலாளர்கள் மனோகரன், சுப்பிரமணி தலைமை மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் பாபு, சிறப்புரை கழக முதன்மைச் செயலாளர் – அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இப்பொதுக் கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், செந்தில், துணை மேயர் திவ்யா, மாநகரத் துணைச் செயலாளர் சந்திரமோகன், ராஜேஸ்வரன் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           141
141                           
 
 
 
 
 
 
 
 

 08 June, 2024
 08 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments