திருச்சி திருவரங்கம் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் சிறப்புஉதவி ஆய்வாளர் ஆறுமுகம் (48) இவருக்கும் திருவரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த பெண் தலைமை காவலர் மாது (43) என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்தது.

இந்த சூழலில் மாதுவுக்கும் சமயபுரம் டோல்கேட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயச்சந்திரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகம் கோபமடைந்து மாதுவிடம் விசாரித்துள்ளார். ஆனால் இது குறித்து எதுவும் கூறாத மாது ஆறுமுகத்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

சம்பவத்தன்று மாது ஆட்டோவில் ஜெயச்சந்திரனுடன் சிறுகாம்பூர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஆட்டோவை விரட்டிச் சென்ற ஆறுமுகம் சிறுகாம்பூரில் ஜெயச்சந்திரனை வழி மறித்து அடித்து உதைத்தார்.

இதில் காயமடைந்த ஜெயச்சந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் அவருடன் வந்த 4 பேர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி விசாரணை மேற்கொண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் தலைமை காவலர் மாது இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 08 June, 2024
 08 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments