திருச்சிராப்பள்ளி ஹோலி கிராஸ் (தன்னாட்சி) கல்லூரியின் பிரிட்ஜ் கோர்ஸ் தொடக்க விழா நடைபெற்றது. மாணவர்களின் தற்போதைய அறிவுத்திறனை அடுத்த நிலைக்கு உயர்த்தவும் நல்லதொரு சிறப்பான எதிர்காலத்தை மாணவர்கள் திட்டமிடவும் இந்த கோர்ஸ் பெரிதும் உதவும் இதுவே அதன் நோக்கம்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் ஃப்ரெஞ்ச் துறைத் தலைவர் ஹெர்மன் கார்டுஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை எம் கல்லூரி முதல்வர் மதிப்பிற்குரிய அருட்சகோதரி டாக்டர்.இசபெல்லா ராஜகுமாரி தலைமையேற்று நடத்தினார். சிறப்பானதொரு பாராட்டுரை வழங்கி அதில் உயர்கல்வியின் நோக்கத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.


சிறப்பு விருந்தினரான ஹெர்மன் கார்டுஸ்….., ஒளிமயமான எதிர்கால வாழ்வைப் பெற கல்வி மிக மிக அவசியம் என்றும், மாணவர்களின் வாழ்க்கையில் உயர்கல்வியின் முக்கியத்துவத்தை விதைப்பதில் பெற்றோர்களின் பங்கு மிக அவசியம் என்றும் கூறினார். மேலும்,மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் நன்றியுணர்வோடு செயலபட வேண்டும் என்ற முக்கிய கருத்தை முன்வைத்தார். மேலும் மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தில் கவனம் செலுத்திடவும் மற்றும் கல்லூரியில் வழங்கப்படும் வாய்ப்புகளை சிறப்பான முறையில் பயன்படுத்தவும் சில அறிவுரைகளைக் கூறி மாணவர்களை ஊக்குவித்தார்.


எம் கல்லூரியின் பிரிட்ஜ் கோர்ஸ் 3 ஜூன் 2024 முதல் 8 ஜூன் வரை நடைபெற்றது. 6 நாட்களும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்து தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொண்டார்கள். மேலும்,பள்ளி காலம் முடிந்தவுடன் முதன் முறையாகக் கல்லூரி வரும் மாணவர்களுக்கு இது ஓர் அறிமுகத் தளமாக அமைந்தது. Gen Z மாணவர்களின் LSRW திறன்ளை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த பிரிட்ஜ் கோர்ஸ் நடைபெற்றது. மேலும்,சொற்கள் மேம்பாடு மற்றும் ஆங்கிலத்தில் கலந்துரையாடுதல் போன்றவற்றை மையப்படுத்தி நிறைய செயல்பாடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.


பிரிட்ஜ் கோர்ஸ் நிறைவடைந்ததும் கடைசி நாளான 8 ஜூன் 2024 அன்று காலை 11:30 மணியளவில் பிரிட்ஜ் கோர்ஸ் நிறைவு விழா மற்றும் ரீடதான் 24 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை எம் கல்லூரி முதல்வர் மதிப்பிற்குரிய அருட்சகோதரி டாக்டர் இசபெல்லா ராஜகுமாரி தலைமையேற்று நடத்தினார். மேலும்,அவர் தனது உரையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வியின் மீது கொண்டுள்ள ஆர்வத்தைப் பாராட்டிப் பேசினார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியை டாக்டர். ஜெயஶ்ரீ அகர்வால் (ஹோலி கிராஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர்) கலந்து கொண்டார். மேலும் தன்னுடைய சிறப்புரையில், மாணவர்கள் தங்கள் கல்லூரி நாட்களை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எந்தவொரு திறனைக் கற்றுக் கொள்ளும்போதும் பயிற்சி மிக மிக முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினார்.

ரீடதான் 24 நிகழ்ச்சியை முன்னிட்டு நிறைய மாணவர்கள் விளக்கப்படம் பிடித்து நின்று புத்தக வாசிப்பை வலியுறுத்தினர். மேலும்,ஒரு துறைக்கு ஒரு மாணவர் என்ற கணக்கில் நிறைய மாணவர்கள் புத்த்க வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினர். இதைப் பாராட்டிப் பேசிய சிறப்பு விருந்தினர் அம்மாணவர்களை ஊக்குவித்தார்.

இந்த பிரிட்ஜ் கோர்ஸ் முழுக்க முழுக்க Gen Z மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இதன் வாயிலாக 1650 இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           125
125                           
 
 
 
 
 
 
 
 

 10 June, 2024
 10 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments