திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் செயல்பட துவங்கியது . ஏற்கனவே உள்ள முனையம் மூடப்பட்டது அதில் இனி எந்தவித விமான போக்குவரத்து பணிகள் நடைபெறாது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்பட துவங்கிய புதிய முனையத்தில் வருடத்திற்கு 4.5 மில்லியன்(45 லட்சம்) பயணிகளை கையாள முடியும.ஒரே சமயத்தில் 10 விமானங்களில் உள்ள பயணிகளை கையாளலாம். புதிய முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தரையிறங்கும் வசதி உள்ளது 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 240 விமானங்கள் தரையிறங்கி புறப்படலாம்.

சென்னையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானம் முதலாவதாக புதிய முனையத்திற்கு வந்தது. அந்த விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து(வாட்டர் சல்யூட்) வரவேற்பு கொடுக்கப்பட்டது. இன்று வருகை தரும் புறப்படும் பயணிகளுக்கு இனிப்புகளை விமான நிலைய அதிகாரிகள் கொடுத்து புதிய முனைய செயல்படும் நிகழ்வை கொண்டாடினர்.

முதலில் வந்து இறங்கிய பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் வெளியே வந்தனர். இன்று காலை இரண்டாவது முனைய செயல்பட துவங்கியதை முன்னிட்டு மின்விளக்குகளால் ஒளிரும் காட்சி அழகுடன் பிரமிப்பாக இருந்தது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1112 கோடியில் புதிய டெர்மினல் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் புதிய டெர்மினல் கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் (02.01.2024) அன்று திறந்து வைத்தார்.

ஒரே நேரத்தில் 3800க்கும் மேற்பட்ட பயணிகள் கையாளலாம். 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடுக்காக 10 கேட்கள், வருகைக்காக 6 கேட்கள், 60 செக்-இன் கவுன்டர்கள், இமிகி ரேஷன் பிரிவுக்காக தலா 40 கவுண்டர்கள், 15 எக்ஸ்ரேமெஷின்கள், 3 விஐபி லவுஞ்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் உடமைகளை எடுத்து வர சாய்வுதள கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட உள்ளது. அதிநவீன வசதிகளுடன்கூடிய கண்காணிப்புகோபுரம் மூலம் ரன் வேயின் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும்.

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயால் ஆகியோர் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           171
171                           
 
 
 
 
 
 
 
 

 11 June, 2024
 11 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments