கடந்த (29.05.2024)-ந் தேதி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரியமிளகுபாறை புதுத்தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பெறப்பட்ட தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று சோதனையிட்டப்பட்டது.

அப்போது மரக்கடை ஜீவாதெருவை சேர்ந்த ஜாபர்அலி (35) த.பெ.ரகமதுல்லா மற்றும் 2 நபர்கள் சேர்ந்து மூன்று பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்து, ஜாபர் அலி மற்றும் 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களும் மீட்கப்பட்டு, பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் விசாரணையில், எதிரி ஜாபர்அலி மீது காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், பாலக்கரை, உறையூர் மற்றும் தில்லைநகர் காவல் நிலையங்களில் தலா 1 வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

எனவே எதிரி ஜாபர்அலி என்பவர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவர் எனவும், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு அமர்வுநீதிமன்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் மேற்படி எதிரி ஜாபர்அலி மீதான குண்டர் தடுப்பு ஆணை சார்பு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           112
112                           
 
 
 
 
 
 
 
 

 11 June, 2024
 11 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments