திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு, வஉசி நகர், தேவராயநேரி, அசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் பெல் நிறுவனம் அருகே திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயானது கனரக வாகனங்களில் போக்குவரத்தால் சேதமடைந்து நாளொன்றுக்கு லட்சக்கணக்கான குடிநீர் வெளியேறி வீணாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதும் அதனை தற்காலிகமாக சரி செய்வதுமாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக அந்த பகுதியில் குடிநீர் குழாய் மிகவும் சேதமடைந்து சாலையின் ஓரத்தில் குடிநீர் வழிந்தோடி அருகிலுள்ள கழிவு நீர் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் லட்சக்கணக்கான குடிநீர் வீணாகிப் போவதுடன் துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் முறையாக விநியோகம் செய்யாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments