திருச்சி மாவட்டம் குடமுருட்டி அடுத்த கம்பரசம் பேட்டை கணபதி நகர் 3-வது கிராஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சாக்கடையில் செல்லாமல் தெருக்களில் ஆறு போல வெளியேறி வருகிறது. இதனால் துர்நாற்றமும், கொசு உற்பத்தியும் அதிகமாகி உள்ளது.

மேலும் தொற்று நோய் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது மட்டுமின்றி அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கொட்டப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் கோரிக்கை குறித்து திருச்சி விஷன் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி தொற்றுநோய் பரவாத வண்ணம் அந்த இடத்தை தூய்மையாக்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கும், பொது மக்களின் கோரிக்கை குறித்து செய்தி வெளியிட்ட திருச்சி விஷன் செய்து நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           100
100                           
 
 
 
 
 
 
 
 

 17 June, 2024
 17 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments