திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி பாலாஜி நகர் 8-வது கிராஸ் தெருவில் (மேற்கு) வசித்து வரும் பெரியசாமி மகன் வெங்கடேசன் (40). இவர் மணப்பாறை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். (தற்போது விட்டோடி).

வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி சுபா (33/2024)ர ஆகிய இருவரும் தாங்கள், மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற (SEBI) கட்டுப்பாட்டில் உள்ள ZERODHA -Bangalore ஷேர் மார்க்கெட் மூலமாக டிரேடிங் செய்து வருவதாகவும், தன் மீது நம்பிக்கை வைத்து பணம் முதலீடு செய்தால் கொடுத்த பணத்திற்கு லாப பங்காக 1 மாத காலத்திற்குள் திருப்பி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, திருச்சி கீழ அம்பிகாபுரம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் செந்தில்குமார் (40/24) என்பவரிடமிருந்து தனது பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, பல்வேறு தேதிகளில் என மொத்தம் ரூ.85 லட்சம் தொகை வாங்கியதாகவும்,

பின்பு மேற்படி செந்தில் என்பவருக்கு டிவிடன்ட் தொகை என ரூ.26,82,000/- மட்டும் கொடுத்துவிட்டு, அவர்கள் கூறியது போல் எதுவும் லாபத்தொகை மற்றும் மீத தொகை எதுவும் தராமல் ஏமாற்றிவிட்டதாக, மேற்படி செந்தில் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்படி காவலர் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகியோர் மீது, திருச்சிராப்பள்ளி மாவட்டம், குற்றப்பிரிவு குற்ற எண். 39/2024 u/s 420, 406 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கானது தற்போது புலன்விசாரணையில் இருந்து வருகிறது.

மேலும், இதேபோல் மேற்படி காவலர் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் சேர்ந்து, திருச்சியை சேர்ந்த பிரபாகரன் என்பவரிடமும் ரூ.35,50,000/- பணத்தை பெற்றுக்கொண்டு, அதில் ரூ.19,50,500/- மட்டும் மேற்படி பிரபாகரன் என்பவரிடம் கொடுத்து விட்டு, மீத பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்துள்ளார்.

எனவே எதிரி-1 வெங்கடேசன் என்பவர் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்துகொண்டு டிரேடிங் தொழில் செய்து அதிக லாபம் தருவதாக கூறி தன்னுடைய வங்கி கணக்கு மற்றும் தனது மனைவியின் வங்கி கணக்கு மூலமாக பல்வேறு தேதிகளில் பல நபர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அதில் குறிப்பிட்ட தொகையை மட்டும் திருப்பி செலுத்திவிட்டு மீத தொகையை திருப்பி தராமலும் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக செயல்பட்டுள்ளனர்.

மேலும் இதேபோல் திருவெறும்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல நபர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார் என்ற விவரம் விசாரணையில் தெரிய வருகிறது. மேற்படி காவலர் வெங்கடேசன் (03.01.2024)-ஆம் தேதி முதல் விட்டோடியாக இருந்து வருகிறார். மேற்படி காவலர் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments