திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் தாளக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சத்யா தேவி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு போதை பொருள் குழந்தைகள் பயன்படுத்துவதால் உடல், மன அளவில் ஏற்படும் பாதிப்புகள் சமுதாய பிரச்சனைகள், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 விழிப்புணர்வு வழங்கினார்.

லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசைவாணி குழந்தைகள் பாதுகாப்பில் சமுதாயத்தின் பங்கு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் சாலை போக்குவரத்து குறித்தும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சிவா கல்வியின் அவசியம் குழந்தைகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். விழிப்புணர்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் எழுதுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர் சகிலா வரவேற்றார். வங்கி மேலாளர் சந்துரு நன்றி கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments