உலக யோகா தினத்தை முன்னிட்டு ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அந்தனூர் ஒன்றியம் தேவித்தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டுரை, பேச்சு ஓவியம் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி தலைமையாசிரியர் பி.பூங்கொடி வரவேற்றார்.

வட்டாரக் கல்வி அலுவலர் கா.மருதநாயகம் முன்னிலையில் ராயல் லயன்ஸ் சங்க நிர்வாக அலுவலர் அரிமா பெ.யோகா விஜயகுமார், யோகா பயிற்சி மற்றும் செய்தித்தாள் வாசிப்பு பயிற்சியும் அளித்தார். யோகா செய்வதனால் உடலும், உள்ளமும் உறுதிப்படுத்தப்படுவதை இதயம் சிந்திக்கும் திறன் மேம்படுத்தப்படுகிறது.

நோய் நொடி இன்றி நிண்ட நாள் வாழ வழிசெய்கிறது யோகா வட்டாரக் கல்வி அலுவலர் கா.மருதநாயகம், மாணவர்களின் வாசிப்புத்திறன் மேம்பட்ட, வாசிப்பு என்பது குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற ஓர் ஆயுதம் எதிர்கால வெற்றிகுரிய ஒரு திறவுகோல் என்பதை வலியுறுத்தினார்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் அரிமா சங்க சாசன தலைவர் பா, முகமது ஷபி, அரிமா சங்க சாசன செயலாளர் அரிமா கோ. பிரசன்ன வெங்கடேசன், பொருளாளர் அரிமா, அ.ரெங்கராஜர் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவராலும் பரிசுகள் வழங்கப்பட்டது. அப்பள்ளியின் ஆசிரியை அ.சலேத் நன்றி உரை கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments