திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எல்லக்குடி கிராமத்தில் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான நஞ்சை நிலங்களை, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற உத்தர வின்படி கையகப்படுத்தும் பணி நடந்தது.
இதில் 4.02 ஏக்கர் நிலத்தை கோவில் கண்காணிப்பாளர் தேவராஜ், வழக்கு பிரிவு எழுத்தர் விக்னேஸ்வரன் மற்றும் பணியாளர்கள், திருவெறும்பூர் நில அளவையர் விக்னேஷ், எல்லக்குடி கிராம நிர்வாக அலுவலர் தனசேகர், கிராம மக்கள் முன்னிலையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அமீனாவால் சுவாதீனம் வி எடுக்கப்பட்டு, திருக்கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான அனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 கோடியே 25 லட்சம் ஆகும். மேலும் அங்கு, இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்றும், இந்த இடத்தில் மற்றவர்கள் பிரவேசிக்க கூடாது. மீறி பிரவேசித்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு பலகையை கோவில் நிர்வாகம் சார்பில் வைத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments