திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த (19.06.2024)-ந் தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமண்டபம், சமத்துவநகரில் காலை 06:00 மணிக்கு மளிகை கடை உரிமையாளரை முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தை வழிமறித்து, தகராறு செய்து அரிவாளால் நெற்றி மற்றும் கைகளில் வெட்டியும், கத்தியால் முதுகிலும் கையிலும் கிழித்தும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கருமண்டபம் சமத்துவநகரை சேர்ந்த அர்ஜீன் (24) த.பெ.பழனிசாமி மற்றும் எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த கார்த்திக் (31) த.பெ.ரமேஷ் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அர்ஜீன் மற்றும் கார்த்திக் ஆகியோர்கள் மீது கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் 2 அடிதடி வழக்குகளும், 1 வழிப்பறி வழக்கு மற்றும் 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருப்பது தெரிய வந்தது. எனவே, எதிரிகள் அர்ஜீன் மற்றும் கார்த்திக் ஆகியோர்கள் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரிய வந்ததால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           17
17                           
 
 
 
 
 
 
 
 

 05 July, 2024
 05 July, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments