தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது இதிலும் குறிப்பாக 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகன விபத்தில் உள்ளாவது என்பது எண்ணில் அடங்காமல் இருக்கின்றது பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர்.

வாகனம் ஓட்டுவதை தங்களுக்கான பெருமை என்றும் சிலர் கருதுகின்றனர்.
இன்னும் சில மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்து இணையதளங்களில் வெளியிடுவது என்ற பல சவாலான செயல்களையும் செய்து வருகின்றனர்.

18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால், 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அவர் ஓட்டி வந்த வாகனத்தின் ஆர்.சி., எனப்படும், பதிவுச்சான்று ரத்து செய்யப்படும். 25 வயது வரை, அவருக்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் தடுக்கும் பொருட்டு
திருச்சி சமூக ஆர்வலர் அய்யாரப்பன் தெரிவிக்கையில்,
18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவதை பள்ளி நாட்களில் முடிந்த வரை பள்ளி கல்வித்துறை உதவியோடு தடுக்கலாம் .
பள்ளிக்கல்வித்துறையே பள்ளிகளுக்கு உத்தரவிட்டு இருசக்கர வாகனங்களை பள்ளிக்கு அடுத்து வரும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பாட்டை குறைக்கலாம்.
அதேபோன்று பெற்றோர்களும் குழந்தைகளுக்கு இருசக்கர வாகனங்கள் கொடுப்பதை தவிர்க்கவும் என்றார்…
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           65
65                           
 
 
 
 
 
 
 
 

 05 July, 2024
 05 July, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments