விக்கிராவண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பணிபுரியும், அம்மாவட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளதாவது…. விக்கிராவண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் 100% வாக்களிக்கும் வகையில் அன்றைய தினம் அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள்,

மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135(B)- ன்படி, வாக்களிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

அவ்வாறு விடுமுறை வழங்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, விடுமுறை தொடர்பான புகார்கள் இருந்தால், (0431-2311343 / 94453 98756) தெரிவிக்கலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments