திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியிலுள்ள பசுமை பூங்காவில், நுண் உர செயலாக்க மையம் செயல்பட்டுவருகிறது. இந்த நுண்உர செயலாக்கம் மையத்தில் குப்பைகளை கொட்டுவதற்காக குப்பைகளுடன் வந்த மாநகராட்சி டிப்பர் லாரியிலிருந்த குப்பைகளை கொட்ட முற்பட்டபோது மேலே இருந்த மின்கம்பியில் உரசியதில் டிப்பர் லாரி தீப்பற்றியது.

லாரியில் டீசல் டேங்கர் வெடித்து சிதறிய நிலையில் நுண்ணுயிர் உர செயலாக்க மையத்தில் இருந்த மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி ஒளிந்து கொண்டனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் டிப்பர் லாரி முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாகியது.

இந்த தீ விபத்தில் மாநகராட்சி லாரி ஓட்டுநர் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments