ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி போர்ட் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு திருச்சி பள்ளக்காடு மானிய நடுநிலைப் பள்ளியில் 150 குழந்தைகளுக்கு பிறந்தநாள் கேக்குகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கபட்டது. விழாவினை துணை ஆளுநர் Rtn.DS.சஞ்சய் துவக்கி வைத்து உரையாற்றினார்.
மேலும் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் வையத்தலைமை கொள் என்ற தலைப்பில் Rtn.S.கருணாகரன், Rtn.K.ராமகணேசன், Rtn.KK. செல்வராஜ் மூவரும் அவரவர் உரையாடல் முறைப்படி குழந்தைகள் வாழ்வில் முன்னேற நல்ல விஷயங்களை பதிவு செய்தனர். குழந்தைகளும், ஆசிரியர்களும் ரொட்டேரியன்களும் மன மகிழ்வுடன் விழாவில் கலந்து கொண்டனர்.
திருச்சி போர்ட் கிளப் செயலாளர் Rtn.ரமேஷ்நடராஜன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற நமது சங்க உறுப்பினர்கள் Rtn.PP.DS.சஞ்சய், Rtn.PP.DP.பாலாஜி, Rtn.PP.KK.செல்வராஜ், Rtn.PP.M.எட்வின், Rtn.RM.நடராஜன், Rtn.M.ராமநாதன், Rtn.M.சுரேஷ் பாபு, Rtn.S.கருணாகரன், Rtn. ரமேஷ் நடராஜன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments